சென்னை வருவது ஸ்பெஷல் – நடிகை மஞ்சுவாரியர்!!

சென்னை வருவது இப்போதெல்லாம் ஸ்பெஷலாக இருப்பதாக மலையாள நடிகையான மஞ்சு வாரியர் தெரிவித்துள்ளார்

அசுரன் திரைப்படத்தில் பச்சையம்மா கதாபாத்திரம் மூலம் தமிழக ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றவர் மலையாள நடிகைஞ் மசு வாரியர், சமீபத்தில் விருது வழங்கும் விழா ஒன்றுக்காக சென்னைக்கு வருகை தந்திருந்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த அவர், ”அசுரன் திரைப்படம் வெளியாவதற்கு முன்பும் நான் அடிக்கடி சென்னை வந்து செல்வேன்.

என் மற்ற படங்களின் பணிக்காக வருகை தருவேன். ஆனால் அசுரன் திரைப்படத்திற்கு பின் சென்னை வருவது ஸ்பெஷலாக இருக்கிறது.

என்னை அடையாளம் கண்டுகொண்டு மக்கள் வந்து பேசுகிறார்கள். தமிழில் நல்ல படங்களில் நடிக்க ஆவலாக உள்ளேன். நல்ல கதைக்காக காத்திருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

மஞ்சு வாரியர் விஜய் சேதுபதியுடன் மலையாளத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த திரைப்படம் அடுத்த வருடம் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor