சோமாலியா தலைநகரில் கார் குண்டுவெடிப்பு!!

சோமாலியாவின் தலைநகரில் மக்கள் நடமாட்டம் நிறைந்த காலை நேரத்தில் இடம்பெற்ற கார் குண்டுவெடிப்பில் குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

மொகாடிசு நகரின் முக்கிய சந்தியில் உள்ள ஒரு சோதனைச் சாவடியை இலக்க வைத்தே இந்த குண்டுவெடிப்பு இன்று (சனிக்கிழமை) காலை இடம்பெற்றது.

இதில் பொதுமக்கள் 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் பல படுகாயமடைந்த நிலையில் அருகிலுள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் அதிகாரி இப்ராஹிம் முகமது தெரிவித்துள்ளார்.

குறித்த வெடிகுண்டு தாக்குதலுக்கு எந்தவொரு குழுவும் இதுவரை பொறுப்பேற்கவில்லை எனவும், ஆனால் அல்-ஷபாப் தீவிரவாதிகள் இந்த தாக்குதலை மேற்கொண்டிருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பொலிஸார் தீவிர விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.


Recommended For You

About the Author: Editor