தூதுவர்களை நாடு திரும்புமாறு அழைப்பு!!

வெளிநாடுகளிலுள்ள இலங்கை தூதரகங்களில்– துறைசார் இராஜதந்திரிகள் அல்லாத தூதுவர்களை ஜனவரி 15ஆம் திகதிக்கு முன்னதாக நாடு திரும்புமாறு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெளிநாடுகளிலுள்ள இலங்கை தூதரகங்களில், அரசியல் ரீதியாக நியமனங்களைப் பெற்ற துறைசார் இராஜதந்திரிகள் அல்லாத தூதுவர்களை நாடு திரும்புமாறு புதிய அரசாங்கம் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பலருடைய பதவிக்காலம் இந்த ஆண்டு இறுதியுடன் முடிவடையும் நிலையில் அவர்கள் நாடு திரும்பவுள்ளனர். ஏனையவர்கள், பணிகளை முடித்துக் கொண்டு ஜனவரி 15ஆம் திகதிக்கு முன்னதாக நாடு திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

கோட்டாபய ராஜபக்ஷ, நாட்டின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற நாள் முதல் அரச நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு நிலையங்களில் புதிய செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor