குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பிரதிப்பொலிஸ்மா அதிபராக

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பிரதி பொலிஸ்மா அதிபராக பிரதி பொலிஸ்மா அதிபரான நுவன் வேதசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் இதற்கு முன்னரும் குற்றப்புலனாய்வு பிரிவில் பணியாற்றி உள்ளார்.

அண்மையில் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகள் 3 பேருக்கும் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோருக்குமே இடமாற்றம் வழங்கப்பட்டது.

இதன்போது , கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் இருந்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி நுவன் வேதிசிங்க, சிலாபத்துக்கு மாற்றப்பட்டிருந்தார்.

இந்நிலையிலேயே குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பிரதி பொலிஸ்மா அதிபராக நுவன் வேதசிங்க தற்போது நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor