யாத்திரை சென்ற முஸ்லிம் நபர்கள் இருவர் கைது!!

கதிர்காமம் நோக்கி காட்டுப்பாதையூடாக பாதையாத்திரை மேற்கொள்வோர் மத்தியில் சென்ற இரண்டு முஸ்லிம் நபர்கள் ஊடகவியலாளர்களினால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருவரில் ஒருவர் வெளிநாட்டினை சேர்ந்தவர் எனவும் அவர் எந்த நாட்டினை சேர்ந்தவர் என அடையாளப்படுத்த முடியவில்லையெனவும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

நேற்று பகல் வியால காட்டுப்பகுதியில் பெண்னொருவர் இருவரில் சந்தேகப்பட்டு அப்பகுதியால் கால்நடையாக யாத்திரைசென்ற ஊடகவியலாளர்களிடம் குறித்த நபர் குறித்து கூறியுள்ளார்.

இதன்போது ஊடகவியலாளர்கள் மூவர் குறித்த இருவரிடமும் சென்று விசாரித்தபோது அவர்கள் முன்னுக்கு பின்னான தகவல்களை கூறியுள்ளனர்.

அத்துடன் அவர்களிடம் அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டினை கோரியபோதிலும் அவர்களிடம் எதுவும் இருக்கவில்லையெனவும் அவர்கள் பாதையாத்திரிகர்களுடன் ஏன் வந்தார்கள் என்பது குறித்து எதனையும் தெரிவிக்கவில்லையெனவும் அங்கிருக்கும் ஊடகவியலாளர்கள் தெரிவித்தனர்.

இதன்போது இருவரும் வியாலையில் உள்ள படையினருக்கு அறிவிக்கப்பட்டு அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அங்கிருக்கும் ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.


Recommended For You

About the Author: Editor