
கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்னவிடம் குற்றப்புலனாய்வு திணைக்களம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.
கைதுசெய்யப்பட்டபோது, வெள்ளை வான் ஊடக சந்திப்பு தொடர்பாக அவரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொண்டதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்னவை கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பித்திருந்த நிலையில், நேற்று முன்தினம் நாரஹேன்பிட்டியில் உள்ள லங்கா தனியார் வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இதையடுத்து, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் நேற்று அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், குறித்த வைத்தியசாலைக்கு சென்ற கொழும்பு மேலதிக நீதவான் சலனி பெரேரா, நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்னவை எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.
அதற்கமைய நேற்று இரவு அவர் சிறைச்சாலை அதிகாரிகளால் பொறுப்பேற்கப்பட்டுள்ளாரென்பது குறிப்பிடத்தக்கது.