முல்லை மாணவி சாதனை

முல்லைத்தீவு மாவட்ட மட்டத்தில் வணிகத்துறையில் ரவிச்சந்திரன் யாழினி முதலிடம் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.

வெளியாகியுள்ள பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் தேவிபுரம், பகுதியை சேர்ந்த புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவி இரவிச்சந்திரன் யாழினி வணிகத்துறையில் மாவட்ட ரீதியில் முதலிடத்தை பெற்றுள்ளார்.

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது தனது தந்தையை தொலைத்து காணாமல்போனவர்கள் பட்டியலில் தந்தையை தேடிக்கொண்டிருக்கும் குறித்த மாணவி, ஒரு கையை இழந்த தன்னுடைய தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வரும் நிலையில், இவ்வாறு சாதனைப் படைத்துள்ளார்.

இவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துவரும் நிலையில், இவருடைய தாயாரையும் பாராட்டி வருகின்றனர்.


Recommended For You

About the Author: ஈழவன்