அரசாங்கம் அரசியல் வேட்டையாடலில் ஈடுபடுகிறது!

அரசாங்கம் அரசியல் வேட்டையாடலில் ஈடுபட்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேசா விதானகே தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி – கொடக்கவெல பிரதேசத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார். மேலும் கூறுகையில்,

அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு மாதங்கள் செல்லும் முன்னர் அரசியல் வேட்டை ஆரம்பித்துள்ளது.

கோட்டாபய ராஜபக்சவுக்கு கிடைத்த மக்கள் ஆணை இதற்காக கிடைக்கவில்லை.

நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லவும், அரசியல் மாற்றங்களை செய்யவுமே மக்கள் இந்த ஆணையை வழங்கினர்.

கோட்டாபய ராஜபக்ச அன்று அமைதியாக தனது பதவியில் பங்களிப்பை செய்தார்.

அந்த கௌரவத்திற்காக மக்கள் இந்த ஆணையை வழங்கினர்.

எனினும் தற்போது கோட்டாபய ராஜபக்ச தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் அன்று மகிந்த ராஜபக்சவுடன் இருந்த குழுவினர் மீண்டும் தமது வேலைகளை ஆரம்பித்துள்ளனர்.

எந்த நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அரசியல்வாதிகளுக்கு எதிராக குற்றச்சாட்டு இருக்குமாயின் நாட்டின் சுயாதீன சட்டத்தை செயற்படுத்துவதில் தவறில்லை.

எனினும் அரசியல் ரீதியாக வேட்டையாடினால் அது நாட்டின் ஜனநாயகத்தை மீண்டும் அதளபாதளத்திற்குள் தள்ளி விடும் எனவும் ஹேசா விதானகே குறிப்பிட்டுள்ளார்.


Recommended For You

About the Author: Editor