சீன இறக்குமதி குறித்து தீவிர அவதானம்!

சீனாவிலிருந்து சிகரட் இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளமை தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இதன்போதே இந்த விடயம் தொடர்பாக அவதானம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

போதைப்பொருளை ஊக்கப்படுத்தும் வகையில் சீன சிகரட்டுக்களை இறக்குமதி செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால், ஜனாதிபதியும் தானும் அரசாங்கத்திலிருந்து வெளியேறுவோமென சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன நேற்று தெரிவித்திருந்தார். இந்நிலையிலேயே இந்த விடயம் தொடர்பாக இன்று ஆராயப்படவுள்ளது.

இதேவேளை கொழும்பு – முகத்துவாரம் மஹாவத்தை பகுதியில் எரிபொருள் விநியோக குழாய் அமைக்கப்படுவதால் பாதிக்கப்படுகின்ற குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்குவது தொடர்பாகவும் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் அவதானம் செலுத்தப்படவுள்ளது


Recommended For You

About the Author: Editor