‘முகத்தை அடையாளம்’ காணும் அதிநவீன கேமராக்கள்!!

பிரான்சின் வீதிகளில் முகத்தை அடையாளம் காணும் (facial recognition) அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.

இதுவரையான வீதி கண்காணிப்பு கருவிகளில் சம்பவ இடத்தினை புகைப்படம் எடுக்கும் வசதி மாத்திரமே இருந்த நிலையில், தற்போது முகத்தை ‘ஐபோன்’களில் உள்ளது போல் முகத்தை ஸ்கேன் செய்து நபர்களை அடையாளம் காணும் வசதி கொண்டுவரப்பட உள்ளது.

ஆனால் இது மிக மிக ஆரம்பக்கட்டத்தில் உள்ளதாகவும், இது குறித்த மேலதிக தகவல்கள் வெளியிட முடியவில்லை எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முகத்தை அடையாளம் காணும் கேமராக்கள் பல்வேறு சூழ்நிலைகளில் உதவும் எனவும், குற்ற சம்பவங்களின் போது, அவர்களை அடையாளம் காண மிக உதவியாக இருக்கும் எனவும் அறிய முடிகிறது.

ஏற்கனவே 80 கேமராக்கள் இது போது பொருத்தப்படு வெள்ளோட்டம் பார்க்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: Editor