பல்கலைக்கு தகுதி பெற்றோர்

வெளியான க.பொ.த உயர்தர பரீட்சை முடிவுகளின்படி, 181,126 மாணவர்கள் பல்கலைக்கழக நுழைவுக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை, பல்வேறு முறைகேடுகள் காரணமாக 71 மாணவர்களின் முடிவுகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளன.

மறு திருத்தங்களுக்கான விண்ணப்ப இறுதித் திகதி ஜனவரி 17, 2020 ஆகும். பரீட்சை முடிவுகளை மீளாய்வு செய்ய வேண்டிய விண்ணப்பங்களை அந்த திகதிக்கு முன்னர் பரீட்சைகள் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

பரீட்சை முடிவுகள் தொடர்பான மேலதிக தகவல்களை பெற பின்வரும் தொலைபேசி இலக்கங்களான 011278 42 08, 011278 4537 அல்லது 1911 எனும் இலக்கத்தினூடாக தொடர்பு கொள்ளமுடியும்.

ஓகஸ்ட் 5 முதல் 31 ம் திகதி வரை நாடு முழுவதும் 2,678 பரீட்சை மையங்களில் நடத்தப்பட்ட, உயர்தர பரீட்சையில் மொத்தம் 337, 704 மாணவர்கள் தோற்றியிருந்தனர். இவர்களில் 4,789 விண்ணப்பதாரர்கள் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் ஆவர்.

கடந்த ஆண்டு ​​பல்கலைக்கழக நுழைவு 167,907 மாணவர்கள் தகுதி பெற்றிருந்தனர். இந்த ஆண்டு, 181,126 மாணவர்கள் பல்கலைக்கழக நுழைவுக்கு தகுதி பெற்றுள்ளனர்.


Recommended For You

About the Author: ஈழவன்