
நாடாளுமன்ற தேர்தல் ஆசனப்பங்கீடு குறித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் முடிவடைந்துள்ளது.
இந்நிலையில் நேற்றைய கூட்டத்திலும் தெளிவான முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த கூட்டத்தை போலவே இம்முறையும் கட்சிகள் வாதப்பிரதிவாதங்களில் ஈடுபட்ட நிலையில் இலங்கை தமிழ் அரசுக்கட்சி மிக அதிகமான ஆசனங்களை எதிர்பார்ப்பதால் கூட்டத்தில் இணக்கப்பாடு எட்டப்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, மீண்டும் கொழும்பில் அடுத்த வாரம் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் சந்திப்பில் ஈடுபடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.