உயர்தர பெறுபேறுகள் வெளியானது

2019 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி http://doenets.lk என்ற அரசாங்க இணையத்தளத்தினூடாக பரீட்சை பெறுபேறுகளை பரீட்சார்த்திகள் பார்வையிட முடியும்.

குறித்த பெறுபெறுகள் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித அறிவித்திருந்த நிலையில் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

உயர்தர பரீட்சை பெறுபேறுகளை, சுட்டெண் மாத்திரமின்றி, தேசிய அடையாள அட்டை இலக்கத்தினை பதிவு செய்தும் பார்க்க முடியும்.

கடந்த ஓகஸ்ற் மாதம் 8ஆம் திகதி ஆரம்பமான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் இம்முறை 3 இலட்சத்து 37 ஆயிரத்து 704 பேர் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது


Recommended For You

About the Author: ஈழவன்