
கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு 30 ஆம் திகதிவரை விளக்கமறியல் வைக்க கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ராஜித சேனாரத்னவிடம் விசாரணைகளை மேற்கொள்ள கொழும்பு மேலதிக நீதவான் லங்கா வைத்தியசாலைக்கு சென்றிருந்தார்.
குறித்த விசாரணையின்பின்னரே அவரை 30 ஆம் திகதிவரை விளக்கமறியல் வைக்க உத்தரவிட்டார்.