பிரித்தானிய உயர்ஸ்தானிகர் – நீதி அமைச்சர் சந்திப்பு!

இலங்கையிலுள்ள பிரித்தானிய தூதுரகத்தின் உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டனுக்கும் (Sarah Hulton) நீதித்துறை, மனித உரிமைகள் மற்றும் சட்ட சீர்திருத்த அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வாவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

மனித உரிமைகள் மற்றும் சட்ட சீர்திருத்த அமைச்சில் குறித்த சந்திப்பு இன்று (வெள்ளிக்கிழமை) காலை இடம்பெற்றுள்ளது.

இதன்போது சட்டத்துறையில் புதிய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் சீர்திருத்தங்கள் மற்றும் சிறைத்துறையில் முன்னெடுக்கப்படுகின்ற சீர்திருத்தங்கள் குறித்து அமைச்சர், உயர்ஸ்தானிகருக்கு தெளிவுப்படுத்தினார்.

சிறை சீர்திருத்தம் மற்றும் புதிய சட்டத்தை உருவாக்கும் விடயங்களில் ஆலோசனைகளை வழங்க பிரித்தானியா அரசு தயாராக இருப்பதாகவும் புதிய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்பு பணிகளுக்கும் உயர்ஸ்தானிகர் தனது பாராட்டுகளையும் தெரிவித்தார்.


Recommended For You

About the Author: Editor