
கஸகஸ்தான் அல்மட்டி விமான நிலையத்திலிருந்து 100 பயணிகளுடன் நர்சுல்தான் நோக்கி பயணித்த விமானமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விமான நிலையத்திலிருந்து உள்ளூர் நேரப்படி இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை புறப்பட்ட விமானம் சிறிது நேரத்திலேயே அருகில் இருந்த 2 அடுக்கு மாடி கட்டடம் மீது மோதி விபத்திற்குள்ளானது.
இந்நிலையில், இந்த சம்பவத்தில் இதுவரையில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் விமானத்தில் பயணித்த பயணிகளில் பலர் உயிருடன் இருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது.
அவசர உதவி மற்றும் மீட்புப் படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.
விமான நிலையத்தில் இருந்து விமானம் மேழெழுந்தபோது, போதிய உயரத்திற்கு எழும்பாததால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாமென தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம் பனிமூட்டமான வானிலை நிலவியதால் இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாமென்றும் இருவேறு கோணத்தில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளன.
இந்நிலையில், இந்த விபத்த குறித்து கருத்து வெளியிட்டுள்ள கஸகஸ்தான் ஜனாதிபதி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அத்தோடு இவ்வாறான விபத்துக்கள் கண்டிக்கத்தக்கவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.