
நடிகை கீர்த்தி சுரேஷ் மகாநடி திரைப்படத்திற்காக தேசிய விருது பெற்றார்.
இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், ‘எனது உணர்வுகளை வார்த்தைகளால் சொல்ல முடியாது.
ஆனாலும் முற்படுகிறேன். இது ஒரு கனவு மட்டுமல்ல. ஒரு குறிக்கோள். அது என்னைத் தொடர்ந்து கொண்டே இருந்தது. மறக்கமுடியாத இந்த பயணத்தில் ஒரு பகுதியாக இருந்த ஒவ்வொருவருக்கும் நன்றி.
நான் இந்த நிலைக்கு வருவதற்கு உந்து சக்தியாக இருந்த நடிகையான எனது அம்மாவுக்கும், இந்த கதாப்பாத்திரத்தை ஏற்கலாமா வேண்டாமா என்ற சந்தேகத்தில் இருந்தபோது கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஊக்கமளித்த கோவிந்த் மாமாவுக்கும் இந்த விருதை சமர்ப்பிக்கிறேன்.
இவை அனைத்திற்கும் பின்னால் மூளையாக இருந்த இயக்குநருக்கும் நன்றி. சாவித்ரிமா, நீங்கள் எங்களைப் பார்த்து, எங்களை ஆசீர்வதித்தீர்கள். என்னைத் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி. நான் எப்போதும் உங்களுக்கு கடன்பட்டிருப்பேன்.
எனது குறிக்கோள் பட்டியல் இன்னும் நிறைய உள்ளது. அடுத்தடுத்து செல்ல வேண்டும். நன்றி வெங்கையா நாயுடு சார்’ எனத் தெரிவித்துள்ளார்.