இது சரியான தலைமைத்துவம் அல்ல

குடியுரிமைச் சட்ட எதிர்ப்பு போராட்டம் குறித்து மறைமுகமாக கருத்து தெரிவித்துள்ள இராணுவ தளபதி பிபின் ராவத்,  இது சரியான தலைமை அல்ல எனக் கூறியுள்ளார்.

டெல்லியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர்,  ”தலைவர் என்பது வெறும் தலைமை ஏற்பது மட்டுமல்ல. நீங்கள் முன்னே செல்லும் போது,  மற்றவர்கள் தங்களை பின் தொடர்வார்கள் என்ற எண்ணம் வேண்டும். இது சாதாணரமானது அல்ல.

மிகவும் எளிமையான விஷயம் போல தோன்றும். ஆனால்  இது மிகவும் சிக்கலான விஷயம். உங்களை சரியான திசையில் வழிநடத்தி செல்பவர்களே தலைவர்கள். தவறாக வழி நடத்தி செல்பவர்கள் தலைவர்கள் அல்ல.

கல்லூரி  பல்கலைக்கழக மாணவர்கள் பெரிய அளவில் கூடி போராட்டம் நடத்தியதை பார்த்தோம். இதன் மூலம் நமது நகரங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடந்ததையும் பார்த்தோம். இது தலைமைத்துவம் அல்ல” எனக் கூறினார்.


Recommended For You

About the Author: Editor