
புகையிரத திணைக்களம் பறக்கும் படையணியை உருவாக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகளுக்கு வினைத்திறனான புகையிரத சேவையை வழங்கும் நோக்கத்துடன், அடுத்த வருடம் இந்த படையணி உருவாக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை புகையிரத இராஜாங்க அமைச்சர் சி.பி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
புகையிரத திணைக்களத்தில் ஏதேனும் முறைகேடுகள் நடந்தால் அதை விசாரிப்பதும் இந்த அணியின் பணியெனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்கள் தமது பிரச்சனைகளை பறக்கும் படையிடம் முறையிட ஹொட்லைன் இலக்கம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும், இதன்மூலம் புகையிரதம், புகையிரத நிலையங்களில் ஏதேனும் சட்டவிரோத நடவடிக்கைகள் நடைபெறுவதை அறிந்தால் தெரிவிக்கலாமெனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.