ஆப்கானிஸ்தானில் கார் குண்டு வெடிப்பு

ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினரை குறிவைத்து தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய கார் குண்டுவெடிப்பு தாக்குதலில் 6 வீரர்கள் உயிரிழந்தனர்.

அந்நாட்டின் பால்ஹா மாகாணத்தில் அரசுப்படைகளுக்கு சொந்தமான இராணுவ தளத்தை குறிவைத்து தலிபான் பயங்கரவாதிகள் நேற்று கார் குண்டு வெடிப்பு தாக்குதலை நடத்தினர்.

இந்த தாக்குதலில் 6 பாதுகாப்பு படையினர் உயிரிழந்தனர். மேலும், 3 வீரர்கள் படுகாயமடைந்தனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டில் பல ஆண்டுகளாக தலிபான், ஐ.எஸ்., கிளர்ச்சியாளர்கள் குழு என பல்வேறு பயங்கரவாத குழுக்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

இந்த பயங்கரவாத குழுக்களை ஒழிக்கும் நடவடிக்கையில் உள்நாட்டு இராணுவத்துடன் இணைந்து அமெரிக்க தலைமையிலான கூட்டுப்படைகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால், பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் அவ்வப்போது தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்