
கஜகஸ்தானில் 100 பேருடன் பயணித்த விமானம் விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த விமானத்தில் 95 பயணிகளும் 5 விமான சிப்பந்திகளும் பயணித்துள்ளனர்
விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அருகில் இருந்த 2 மாடி கட்டடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளாகியது.
உள்ளூர் நேரப்படி இன்று வெள்ளிக்கிழமை காலை அல்மாட்டி விமான நிலையத்தில் புறப்பட்ட பெக் ஏர் விமானம் சிறிது நேரத்திலேயே கீழே சென்றுள்ளது.
இந்த விமானம் கஜகஸ்தானின் மிகப்பெரிய நகரமான அல்மாட்டியில் இருந்து நாட்டின் தலைநகரான நர்சுல்தானுக்கு செல்லும் போதே இவ்விபத்துக்குள்ளாகியுள்ளது.
சம்பவ இடத்திற்கு மீட்பு பணி ஊழியர்கள் விரைந்துள்ளனர்.