பெரும்தொகை கஞ்சா பறிமுதல்!

தமிழகத்தின் இராமேசுவரத்தில் இருந்து இலங்கைக்கு 80 கிலோ கஞ்சாவை கடத்த முயன்ற 6 பேர் இராமேஸ்வரம் போலீசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் இருந்து கஞ்சாவை கொடுத்து அதற்கு பதிலாக இலங்கை கடத்தல்காரர்களிடம் இருந்து தங்கம் பெற இருந்தமை போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இராமேசுவரத்தில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படுவதாககிடைத்த ரகசிய தகவலை அடுத்து, தனிப்படை போலீசார் இராமேசுவரம் பகுதியில் நள்ளிரவில் மாறு வேடத்தில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

இதன்போது கடற்கரை பகுதியில் சென்று கொண்டிருந்த காரை தனிப்படையினர் நிறுத்தி சோதனையிட்டபோது காரில் 39 பார்சல்களில் 80 கிலோ கஞ்சா இருந்தமை கண்டுபிடிக்கபட்டுள்ளது.

இதனையடுத்து காருடன் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், காரில் இருந்த ராஜா (38), அவரது தம்பி ஜெய்முனியராஜ் (30), நாகராஜ் (30), ரமேஷ் (38), கோபி (31), மற்றொரு ரமேஷ் (31) ஆகிய 6 பேரையும் கைதுசெய்துள்ளனர்.

இதனையடுத்து அவர்களிடம் மேற்கொண்ட விசரணையில், கஞ்சாவை படகு மூலம் கொண்டு சென்று நடுக்கடலில் வைத்து இலங்கையில் இருந்து படகில் வரும் கடத்தல்காரர்களிடம் கைமாற்றிவிட்டு, அதற்குபதிலாக தங்கக் கட்டிகளை கடத்தி வர திட்டமிட்டு இருந்தமை தெரியவந்துள்ளதாக இராமேஸ்வரம் பொலிசார் தெரிவித்துள்ளமை குறிபிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor