
நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன நாரஹன்பிட்டியில் உள்ள லங்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வெள்ளை வேன் ஊடக சந்திப்பு தொடர்பாக இவருக்கு எதிராக நேற்று முன்தினம் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது அவர், இருதய தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.