மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு ஜனாதிபதி திடீர் விஜயம்!!

ஜனாதிபதி ​கோட்டாபய ராஜபக்ஷ மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

அதற்கமைய அவர் இன்று (வியாழக்கிழமை) வேரஹெரவில் அமைந்துள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கே இவ்வாறு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.

இதன்போது அங்கு பணிபுரியும் ஊழியர்களிடம் கலந்துரையாடிய ஜனாதிபதி, வாகன சாரதி அனுமதி பத்திரம் பெறுவதற்கு வருபவர்கள் குறுகிய நேரத்திலேயே அதனை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

அதற்கு ஏற்ற வகையிலான வசதிகளை போக்குவரத்து திணைக்களம் விரைவில் அமுல்படுத்த வேண்டுமெனவும் அவர் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

மேலும் போக்குவரத்து திணைக்களத்திற்கு வரும் சாரதிகளுக்கு குறிப்பிட்ட ஒரு நேரத்தை வழங்குமாறும் அந்த நேரத்தில் அவர்களுக்கான சேவைகளை விரைந்து முன்னெடுக்குமாறும் ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார்.


Recommended For You

About the Author: Editor