ஈரானில் இணைய சேவைகள் முடக்கம்!

ஈரானில் அரசுக்கெதிராக முன்னெடுக்கப்படும் போராட்டத்தினால், அங்கு பகுதிகளில் இணைய சேவைகளை அரசு முடக்கியுள்ளது.

இதனை அந்நாட்டின் இணைய கண்காணிப்பு சேவை நிறுவனம் உறுதிபடுத்தியுள்ளது. அதிகாரபூர்வமாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

இதற்கிடையில், போராட்டத்தினால் கொல்லப்பட்டவர்களின் நினைவாக எதிர்வரும் வியாழக்கிழமை போராட்டம் நடத்த அந்நாட்டு மக்கள் திட்டமிட்டுள்ளனர்.

எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் குறைந்தது 304 பேர் உயிரிழந்ததாகவும் ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டதாகவும் அம்னெஸ்டி இண்டர்நேஷனல் மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்தது.

வரலாற்று சிறப்பு மிக்க அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தை ஈரான் மீறியதாக கூற எண்ணெய் வளம் மிக்க நாடான ஈரான் மீது, அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்தது.

இதனால், கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ள ஈரான், மானியம் முறைகளில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

ஒரு காருக்கு மாதம் 60 லிட்டர் மட்டுமே வழங்கப்படும். அந்த அளவுக்கு மேல் வாங்கவேண்டுமானால் அதற்கு இருமடங்கு விலை தர வேண்டும்.

மேலும் இணையதள சேவைகளிலும் சில திருத்தங்கள் கொண்டுவரப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன.

தற்போது ஈரானில் படிப்படியாக வன்முறை குறைந்து நாட்டில் இயல்பு நிலை திரும்பியுள்ளதாக கூறப்படுகின்றது.


Recommended For You

About the Author: Editor