
கடந்த திங்கள் கிழமை தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்தவர் இந்திய பிரபல எழுத்தாளர் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்தியாவின் பிரபல எழுத்தாளரான கங்கா பிரஷாத் விமல் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் இருவர் இலங்கைக்கு சுற்றுலா வந்திருந்தனர்.
80 வயதான கங்கா பிரஷாத் மற்றும் அவரது உறவினர்களும் விடுமுறையை களிப்பதற்காக இலங்கை வந்துள்ள நிலையில் இந்த விபத்து சம்பவைத்துள்ளது.
அத்துடன் இந்த சம்பவத்தில் கங்கா பிரசாத் விமலின் மேலும் 2 உறவினர்கள் காயமடைந்துள்ளனர்.
மேலும் அவர்கள் பயணித்த வாகனத்தின் சாரதியான இலங்கை பிரஜையும் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை எழுத்தாளர் கங்கா பிரஷாத் பல நூல்களை எழுதியுள்ளதுடன் பல விருதுகளையும் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது