
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர் இனவாத வன்முறையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட நாமல் குமாரவிற்கு எதிர்வரும் 2020 ஜனவரி 9 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு இன்று (வியாழக்கிழமை) ஹெட்டிபொல நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஊழல் எதிர்ப்பு படையணியின் நடவடிக்கை பிரிவு பணிப்பாளர் நாமல் குமார, குற்றப்புலனாய்வு பிரிவினரால் மே 13 ஆம் திகதி கைது செய்யப்பட்டு, இந்த சம்பவம் தொடர்பாக ஏழு மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.