கதிர்காம ஆலய வருடாந்த உற்சவம் நாளை ஆரம்பம்

வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமம் ஆலயத்தின் வருடாந்த எசல பெர​ஹரா நிகழ்வையொட்டி, மேலதிக கடமைக்காக வருகைதரும் பொலிஸாருக்கு, தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில், கதிர்காமத்திலுள்ள, சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க, ஊவா மாகாண கல்வித் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கமைய, கதிர்காமம் தேசிய பாடசாலை, சசிந்திர ராஜபக்ஷ ஆரம்ப பாடசாலை, தெடகமுவ மகா வித்தியாலயம், கோதமிகம கனிஷ்ட வித்தியாலயம், செல்லக் கதிர்காமம் ஆகிய பாடசா​லைகள், தங்காலை பொலிஸ் அதிகாரிகளுக்கு இன்று மாலை (02) கையளிக்கப்படவுள்ளன.

குறித்த பாடசாலைகள் அனைத்தும், எசல பெரஹரா உற்சவத்தின் பின்னர், 18 ஆம் திகதி, கல்வி நடவடிக்கைகளுக்காக மீள திறக்கப்படவுள்ளன.


Recommended For You

About the Author: Editor