வவுனியாவில் விசேட ஆத்ம சாந்தி பிரார்த்தனை!

சுனாமியால் காவுகொள்ளப்பட்ட உறவுகளின் 15 ஆம் வருட நினைவு தினத்தை முன்னிட்டு வவுனியாவில் விசேட வழிபாடும் ஆத்மசாந்திப் பிரார்த்தனையும் இடம்பெற்றது.

மாவட்ட அந்தணர் ஒன்றியம் மற்றும் குருமன்காடு சித்தி விநாயகர் ஆலய நிர்வாகத்தினரின் ஏற்பாட்டில் இந்த பிரார்த்தனை இன்று(வியாழக்கிழமை)  காலை இடம்பெற்றது.

சிவ குகநாதக்குருகள் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், உயிரிழந்தவர்கள் நினைவாக ஆத்மசாந்தி பூஜைகள் இடம்பெற்றதுடன்,நெய் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் சிவஶ்ரீ பிரபாகர குருக்கள், மயூரக்குருக்கள், திவாகரகுருக்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர் குகனேஸ்வர சர்மா, ஆலயக் குருமார்கள், பரிபாலன சபையினர் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.


Recommended For You

About the Author: Editor