மலையக மக்கள் அஞ்சலி!

சுனாமி அனர்த்தம் இடம்பெற்று அன்றுடன் 15 ஆண்டு நிறைவடைவதை நினைவு கூரும் வகையில் உயிரிழந்த உறவுகளுக்கு மலையக மக்கள் தமது அஞ்சலியை செலுத்தினர்.

கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி இலங்கையின் வரலாற்றில் மிகவும் துயரகரமான நிகழ்வாக காலை 9.254இற்கு ஆழிப் பேரலை அனர்த்தம் இடம்பெற்றது.

ஹற்றன் பொலிஸார், நகர வர்த்தகர்கள் மற்றும் ஹற்றன் டிக்கோயா நகர சபையின் ஏற்பாட்டில் ஹற்றன் புத்தர் சிலைக்கு முன்னால் இடம்பெற்ற அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் சுனாமி அனர்த்தத்தில் உயிர்நீத்த இலங்கை உறவுகளுக்கு தமது அஞ்சலியை மலையக மக்களும் செலுத்தினர்.

ஹற்றன் நகரில் உள்ள வங்கி ஊழியர்கள், நகர வர்த்தகர்கள், சாரதிகள் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பொது மக்கள், ஹற்றன் டிக்கோயா நகர சபையின் உப தலைவர் பாமிஸ் மற்றும் உறுப்பினர்கள் என அனைவரும் இதில் கலந்துகொண்டனர்.


Recommended For You

About the Author: Editor