பரிஸ் – போக்குவரத்தில் முதல் புதிய மாற்றங்கள் அமுல்!!

இன்று ஜூலை 1 முதல், பரிஸ் மற்றும் இல்-து-பிரான்சுக்குள் பல போக்குவரத்து தொடர்பான மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

முன்னர் அறிவித்திருந்தது போல், Crit’Air வகைகளில் 4 மற்றும் 5 வகைகொண்ட டீசல் வாகனக்களுக்கு இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. 2004 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட உந்துருளிகள், ஸ்கூட்டர்களும் இன்றுமுதல் பரிசுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று ஜூலை 1 முதல் trottoirs என அழைக்கப்படும் மின்சார ஸ்கூட்டர்களை வீதி ஓரத்தில் நிறுத்தவும் பரிசுக்குள் தடை விதிக்கப்பட்டுள்ளது. நடை மேடையில் trottoirs ஓட்டிச்செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், வீதிகளில் அதிகபட்ச வேகம் மணிக்கு 20 கி.மீ வேகம் எனவும், பாதசாதிகள் அதிகமாக உள்ள இடங்களில் வெறும் 8 கி.மீ வேகம் எனவும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சட்டங்களை மீறுவோருக்கு €49 இல் இருந்து €135 வரையான தண்டப்பணம் அறவிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: Editor