மழை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!!

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மாவட்டத்திலும் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றதென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்தோடு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிறிதளவில் மழை பெய்யும் எனவும் அத்திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அத்திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.


Recommended For You

About the Author: Editor