உள்நாட்டு – வெளிநாட்டு விஞ்ஞானிகள் யாழிற்கு வருகை!

இலங்கையில் சூரிய கிரகணம் இலங்கை நேரப்படி காலை 8.09 மணிக்கு ஆரம்பமாகி முற்பகல் 11.21 வரை அதாவது 3 மணித்தியாலயங்களும் 12 நிமிடங்களும் நீடித்தது.

அதிலும் 3 நிமிடங்களும் 8 வினாடிகளும் (09:35-09:38) மோதிர வடிவிலான கங்கண சூரிய கிரகணம் (Annular Solar Eclipse) தென்பட்டது.

இந்த சூரிய கிரகணத்தை அவதானிப்பதற்கான ஏற்பாடுகளை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமானது கொழும்பு பல்கலைக்கழகம், மேற்கு நோர்வே பிரயோக விஞ்ஞானப் பல்கலைக்கழகம், இலங்கையின் தொழிநுட்பவியல் மற்றும் புத்தாக்கங்கள் இராஜாங்க அமைச்சு ஆகியவற்றுடன் இணைந்து மேற்கொண்டிருந்தன.

திருநெல்வேலியில் அமைந்துள்ள யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு அருகிலுள்ள மைதானத்திலும், கிளிநொச்சியிலுள்ள பொறியில் பீட நிர்வாக கட்டடத்திற்கு முன்பாகவும் இதற்கான ஏற்பாடுகளை யாழ். பல்கலைக்கழகம் செய்திருந்தது.

இவ்வரிய நிகழ்வினை அவதானிப்பதற்காக உள்நாட்டு, வெளிநாட்டு கிரகண அவதானிப்பாளர்களும் விஞ்ஞானிகளும் ஆர்வம் கொண்டு யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தனர்.


Recommended For You

About the Author: Editor