கனடாவில் நிலநடுக்கம்

கனடா, பிரிட்டிஷ் கொலம்பியாவின் மேற்குக் கடற்கரைப் பகுதியில் உள்ள ஹார்டி துறைமுகத்தில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.  இது ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஹார்டிக் துறைமுகத்தின் மேற்கே 188 கிலோமீற்றர் தொலைவிலும் 10 கிலோமீற்றர் ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் மையம்கொண்டிருந்தது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

மேலும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை. இதே பகுதியில் நேற்று முன்தினம் ஐந்துமுறை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதன்படி, முதல் நிலநடுக்கம் 5.1 ஆகவும் இரண்டாவது 5.6 ஆகவும் மூன்றாவது 5.8 ஆகவும் நான்காவது 6.0 ஆகவும் ஐந்தாவது 4.8 ஆகவும் ரிக்டர் அளவில் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்