பருத்துறையில் கிராமங்களுக்கு இடையில் மோதல்

யாழ்.பருத்துறை- கொட்டடி மற்றும் முனை கிராமங்களை சோ்ந்தவா்களுக்கிடையில் உருவான தா்க்கம் கலவரமாக மாறிய நிலையில், இராணுவம் குவிக்கப்பட்டு கலவரம் அடக்கப்பட்டிருக்கின்றது.

இந்த சம்பவத்தில் 5 பேருக்கும் மேல் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பது டன் பல வாகனங்கள் அடித்து நொருக்கப்பட்டிருக்கின்றது.

இந்தச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர். படுகாயமடைந்தவர்களில் ஐவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு இரண்டு கிராம மக்களும் மாறி மாறி மோதலில் ஈடுபட்டதால் அப் பிரதேசமே களோபரமானதாகக் காணப்பட்டது. இதனையடுத்து சம்பவம் தொடர்பில் பருத்தித்துறைப் பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு பொலிஸார் வந்திருந்த போதும் மோதலைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இரு கிராமங்களுக்கு இடையே மோதல் நிலமைகள் நீடித்ததால் இரானுவத்தினர் களமிறக்கப்பட்டனர்.

இதன் பின்னர் மோதல் சம்பவம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. பழைய பகை ஒன்று இருந்ததாகவும் மதுபோதையில் சிலர் அதனைப் பெரிதுபடுத்தியதால் இந்த மோதல் இடம்பெற்றது.என்று பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 


Recommended For You

About the Author: ஈழவன்