
இன்று கிருஸ்துமஸ் நாளை ஒட்டி பல தேவாலயங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக இல்-து-பிரான்சுக்குள் உள்ள தேவாலயங்கள், கிருஸ்துமஸ் சந்தைகள் என மக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் இந்த பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை பரிஸ் காவல்துறை தலைமையகம் வெளியிட்டுள்ளது.
நேற்று டிசம்பர் 24 ஆம் திகதி நண்பகலில் இருந்து இந்த பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது. இன்றும் தொடரும் இந்த ஏற்பாடுகள் இவ்வாரம் முழுவதும் நீடிக்கின்றன.
பரிசுக்குள் la basilique du Sacré-Cœur de Montmartre (XVIIIe), l’église Saint-Sulpice (VIe), le cirque Alex Gruss (XVIe) ஆகிய தேவாலயங்களில் நேற்றும் இன்று பெருமளவிலான வழிபாடுகளுக்கு ஏற்பாடு செய்யப்படுள்ள நிலையில், அசம்பாவிதங்கள் எதுவும் இடம்பெறாமல் இருக்க இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.