வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு €250,000 நிதி..!!

வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் RATP ஊழியர்களுக்கு €250,000 நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.

RATP தலைமைச் செயலகத்துக்கு இந்த நன்கொடை காசோலை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. “வேலை நிறுத்த நஷ்ட்ட ஈடு” என அடையாளப்படுத்தப்பட்ட காசோலையை Info’Com-CGT தொழிற்சங்கம் அனுப்பி வைத்துள்ளது.

20 நாட்களுக்கு மேலாக தொடரும் இந்த வேலை நிறுத்தத்தில் பல மில்லியன் நஷ்ட்டத்தை RATP மற்றும் SNCF சந்தித்துள்ளது.

இந்நிலையில், பிரான்சின் பல இடங்களில் இருந்து நன்கொடைகள் வசூலிக்கப்பட்டு RATP போக்குவரத்து நிறுவனத்துக்கு இந்த காசோலை வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக Info’Com-CGT தொழிற்சங்க தலைவர் Jean-Luc Kravitz தெரிவிக்கும் போது, நாம் ஏற்கனவே €800,000 வரையான நன்கொடைகளை பெற்றுள்ளோம் என குறிப்பிட்டார்.


Recommended For You

About the Author: Editor