வவுனியாவில் நிறம் பூசப்பட்ட அரிசி விற்பனை!!

வவுனியா வர்த்தக நிலையங்களில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினர் விசேட சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்தவகையில் நேற்று வவுனியா – மன்னார் வீதியில் அமைந்திருந்த பல வர்த்தக நிலையங்களில் அதிகாரிகளால் சோதனை நடவடிக்கை இடம்பெற்றது.

இதன்போது வேப்பங்குளம் பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஓன்றில் நிறப்பூச்சு பூசப்பட்டு சிவப்பு சம்பா அரிசி விற்பனை செய்யப்பட்டதாக தெரிவித்ததை அடுத்து, பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினர் குறித்த அரிசியை பரிசோதனை செய்துள்ளனர்.

அத்துடன் மேலதிக பரிசோதனைக்காக மூன்று பொதிகளில் அரிசி மாதிரிகள் பெறப்பட்டு சீல் செய்து எடுத்துச் சென்றனர்.

அரசாங்கம் வெளியிட்டுள்ள வர்த்தகமானியில் நாடு மற்றும் சம்பா ரக அரிசிகளுக்கு நிர்ணய விலையாக 98 ரூபாய் அறிவித்துள்ளது.

இந் நிலையில் கூடிய விலைக்கு குறித்த அரிசிகளை விற்பனை செய்தமை, காலாவதியான பொருட்களை விற்பனை செய்தமை, அதிக விலையை காட்சிப்படுத்தியமை உள்ளிட்ட குற்றங்களுக்காக வவுனியாவை சேர்ந்த 9 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


Recommended For You

About the Author: Editor