‘வாஜ்பாய் சிலை’ – திறந்து மரியாதை செலுத்தினார் பிரதமர் மோடி

மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் திருவுருச்சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

உத்தரப் பிரதேசத்தின் லக்னோ நகரத்தில் உள்ள லோக் பவனில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 95வது பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், உத்தரப்பிரதேச கவர்னர், அனந்திபென் படேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியின் போது, வாஜ்பாயின் உருவச்சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். பின்னர், மலர் தூவி அவர் மரியாதையும் செலுத்தினார்.

இதனையடுத்து லக்னோவில் அமையவுள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் மருத்துவ பல்கலைக் கழகத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc


Recommended For You

About the Author: Editor