2020 காதல் மன்னர்கள் யார்!

அனைத்து மனிதர்களின் வாழ்க்கையிலும் காதல் என்பது மிகவும் முக்கியமானது. அனைவரின் வாழ்க்கையையும் அழகானதாகவும், அர்த்தமுள்ளதாகவும் மாற்றுவது காதல்தான்.

காதல் எப்பொழுது வரும் என்று யாராலும் கூற முடியாது ஆனால் யார் மீது வரும் என்று கண்டிப்பாக கூற இயலும். ஏனெனில் நமக்கு பிடித்த குணங்கள் இருக்கும் ஒருவர் மீதுதான் யாராக இருந்தாலும் காதல் வயப்படுவார்கள்.

காதலை பொறுத்தவரை காதலிப்பது, காதலிக்கப்படுவது இரண்டுமே மகிழ்ச்சியான விஷயங்கள்தான். பிறரை ஈர்க்கும் குணங்கள் அனைவரிடம் இருக்கத்தான் செய்யும், ஆனால் சிலரிடம் இந்த குணங்கள் அதிகமிருக்கும்.

வரப்போகிற புதுவருடம் சிலருக்கு அற்புதமான காதல் அனுபவங்களை வழங்கப் போகிறது. அதற்கு அவர்களின் ராசியும் ஒரு முக்கிய காரணமாக இருக்கப் போகிறது.

உண்மைதான் வரப்போகிற ஆண்டில் சிலரை காதல் தேடிவரப்போகிறது. அது எந்தெந்த ராசிக்காரர்களுக்கு இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம் மேஷம்

உங்கள் வசீகரமும், உங்களின் நேர்மறை ஆற்றலும் தான் அனைவரையும் உங்களை காதலிக்க வைக்கின்றன. ஒரு இடத்தில் நீங்கள் இருக்கும்போது அங்கிருக்கும் அனைவரும் உங்களைத்தான் பார்ப்பார்கள்.

உங்களுடன் இருக்க அனைவருமே விரும்புவார்கள். நண்பர்கள் உங்களுடன் நேரத்தை செலவிட விரும்புகிறார்கள், பெண்கள் உங்களில் உண்மையான நண்பரைப் பார்க்கிறார்கள்.

இயற்கையாகவே நீங்கள் அன்பானவர்கள் எனவே உங்கள் மீது காதலில் விழுவது அவ்வளவு கடினமாக இருக்காது. இது இந்த வருடம் கொஞ்சம் கூடுதலாகவே இருக்கும்.

 மிதுனம்மிதுனம்

வாழ்க்கையைப் பற்றிய உங்கள் நேர்மறையான கண்ணோட்டத்தினாலும், உங்கள் விளையாட்டுத்தனமான பேச்சாலும் அனைவரையும் மயக்கும் குணம் உள்ளவர் நீங்கள்.

நீங்கள் ஒரு சமூக பட்டாம்பூச்சி போன்றவர், உங்களைச் சுற்றியுள்ள அனைத்து மக்களுக்கும் நீங்கள் கவனம் செலுத்த விரும்புகிறீர்கள்.

நீங்கள் எப்போதுமே சிறந்த மனநிலையில் இருப்பதாகத் தெரிகிறது, மேலும் மக்கள் உங்களுடன் நேரத்தை செலவிட விரும்புகிறார்கள்.

நீங்கள் எல்லோரையும் அன்புடனும் பாசத்துடனும் நடத்துவதால் சில சமயங்களில் உங்களுக்கு காதல் பிரச்சினைகள் எழலாம், எனவே உங்கள் அன்புக்குரியவர் சற்று புறக்கணிக்கப்பட்டதாக உணரலாம்.

ஆனால் இது உங்களின் நோக்கம் அல்ல, இது எதார்த்தமாக நடப்பதுதான். இந்த ஆண்டில் உங்களுக்கு அதிக அன்புதொல்லை வரப்போகிறது

சிம்மம் சிம்மம்

உஙக்ளின் அதீத நம்பிக்கை உணர்வு காரணமாக அனைவரும் உங்கள் மீது எளிதில் காதலில் விழப்போகிறார்கள்.

நீங்கள் விரும்பியதை எப்போதும் பெறப்போகிறீர்கள். நீங்கள் ஒன்றை விரும்பினால் அதனை அடைய மற்றவர்களை போல கடினமாக முயற்சி செய்ய வேண்டுமென்ற அவசியமில்லை, அதிர்ஷ்டம் எப்போதும் உங்கள் அருகில் இருக்கும் வரத்தைப் பெற்றவர்கள் நீங்கள்.

உங்கள் நம்பிக்கையுடன், நீங்கள் விரும்பும் எந்த மனிதனையும் நீங்கள் பெறலாம், ஏனென்றால் உங்களை யாரும் எதிர்க்க மாட்டார்கள்.

உங்களுடன் உறவில் இருப்பவர்களின் கனவை நீங்கள் எப்பொழுதும் நிறைவேற்றுவீர்கள். எங்கு சென்றாலும் அங்கு வெற்றிக்கொடியை நாட்டுவதால் இவர்களை அனைவரும் விரும்பத் தொடங்குவார்கள்.

இந்த வருடத்தில் உங்கள் காதல் வாழ்க்கை கலகலப்பாக இருக்கப்போகிறது.

துலாம் துலாம்

உங்கள் வாழ்க்கையில் நுழையும் நபர்களுக்கு நீங்கள் எப்போதும் சிறந்த நண்பராக இருக்க முயற்சிக்கிறீர்கள் என்பது உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்குத் தெரியும்.

அவர்கள் உங்களுக்கு எவ்வளவு நாள் பழக்கமானவர்கள் என்பது முக்கியமல்ல நீங்கள் அனைவரையும் ஒரே மாதிரிதான் நடத்துவீர்கள்.

பூமியிலுள்ள மக்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் உதவ வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு உள்ளது. உங்களின் பெரும்பாலான நேரத்தில் நீங்கள் இதைத்தான் செய்கிறீர்கள். இதனை நீங்கள் ரசித்து செய்கிறீர்கள், இந்த ரசனைதான் உங்களை அனைவரையும் விரும்ப வைக்கிறது.

மற்றவர்களின் சிறப்பு என்னவென்பதை நீங்கள் அடிக்கடி அவர்களுக்கு நினைவூட்டுவீர்கள். இதனால்தான் அனைவரும் உங்கள் மீது எளிதில் காதலில் விழுகிறார்கள்.

2020-ல் உங்களை காதலிப்பவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்போகிறது.

தனுசு தனுசு

மக்கள் உங்களை காதலிக்க முக்கிய காரணம் உங்கள் தூய்மையான மற்றும் பரந்த இதயமாகும்.

உங்களிடம் இருந்து ‘இல்லை’ என்ற சொல் ஒருபோதும் வராது, எப்பொழுதும் மற்றவர்களின் தேவையை குறித்தே நீங்கள் சிந்திப்பீர்கள். தேவைகள் உள்ள அனைவரருக்கும் நீங்கள் உதவ முயற்சிப்பீர்கள்.

இதனால்தான் அனைவரும் உங்களை விரும்பத் தொடங்குகிறார்கள். உங்கள் அன்பானவர் உங்களுடன் இருக்கும்போது எப்போதும் பாதுகாப்பாக உணருவார்கள்.

உங்களின் காதல் உறவை நீங்கள் கண்ணின் மணி போல பாதுகாப்பீர்கள் என்று உங்களைச் சுற்றி இருக்கும் அனைவரும் அறிவார்கள். உங்கள் வாழ்க்கையில் வரும் ஒவ்வொரு உறவையும் நீங்கள் முக்கியமான உறவாக கருதுவார்கள்.

அதனால்தான் உங்களை அனைவரும் விரும்புகிறார்கள். உங்கள் கண்ணின் மணியாக இருக்க பலரும் இந்த ஆண்டு விரும்புவார்கள்.


Recommended For You

About the Author: Editor