‘நாங்கள் குறைக்க மாட்டோம்’

எதிர்வரும் முதலாம் திகதியிலிருந்து ஓட்டோக்களுக்கான பயணக்கட்டணத்தை குறைப்பதற்கு தாம் தயாராக இல்லையென அகில இலங்கை ஓட்டோ உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி எரிபொருள் மானியம் பெற்று அதன்  பயனை பயணிகளுக்கு வழங்கவே தாம் எதிர்பார்த்துள்ளதாக சங்கத்தின் தலைவர் சுதில் ஜயருக் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் முதலாம் திகதியிலிருந்து ஓட்டோக்களுக்கான பயணக்கட்டணத்தை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை சுய தொழில் தேசிய முச்சகரவண்டிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில், அகில இலங்கை ஓட்டோ உரிமையாளர்கள் சங்கமும் கட்டணத்தை குறைக்குமா என்பது தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் சுதில் ஜயருக் இதனைக் கூறியுள்ளார்.


Recommended For You

About the Author: Editor