
வைத்தியசாலைகளில் மனித மற்றும் பௌதீக வளங்களை அதிகரிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் விரைவாக கடைபிடிக்குமாறு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
வைத்தியசாலைகளில் காணப்படும் உடனடி தேவைகள் தொடர்பில் வைத்தியசாலை பணிப்பாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, அவர் இந்த பணிப்புரையை வழங்கியுள்ளார்.