வவுனியாவில் இராணுவ வீரரை தாக்கி துப்பாக்கி பறிப்பு

வவுனியா, போகஸ்வெவ இராணுவ முகாமுக்கு அருகில் இனந்தெரியாதவாரால் பறித்துச்செல்லப்பட்ட இராணுவ வீரரின் துப்பாக்கி கெக்கிராவ பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

அத்தோடு இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் இராணுவத்திலிருந்து இடைவிலகியவர் எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

வவுனியா, போகஸ்வெவ முகாமில் கடமையில் இருந்த இராணுவ வீரர் ஒருவரை தாக்கி காயப்படுத்தி அவரது துப்பாக்கி பறித்துச் செல்லப்பட்ட சம்பவம் ஒன்று இன்று (புதன்கிழமை) இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த தாக்குதலில் கழுத்து பகுதியில் காயமடைந்த இராணுவ வீரர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


Recommended For You

About the Author: ஈழவன்