கிரிக்கெட் வீரர்களின் தர வரிசை.

ஒருநாள் துடுப்பாட்ட மற்றும் பந்துவீச்சாளர்களின் தரவரிசைப் பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு தொடருக்கும் பிறகு, சிறப்பாக விளையாடும் அணிகள் மற்றும் வீரர்களின் தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டு வருகிறது.

இதன்படி, தற்போது ஆண்டின் இறுதி தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. இதில் முதலாவதாக ஒருநாள் துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசையை பார்க்கலாம்.

1.இந்த பட்டியலில், இந்தியக் கிரிக்கெட் அணியின் விராட் கோஹ்லி 887 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
2.இந்தியக் கிரிக்கெட் அணியின் மற்றொரு வீரரான ரோஹித் சர்மா 873 புள்ளிகளுடன் இரண்டாவது உள்ளார்.
3.பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பாபர் அசாம், 834 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
4.தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் பாப் டு பிளெஸிஸ் 820 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளார்.
5.நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் ரோஸ் டெய்லர் 817 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளார்.
6.நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் கேன் வில்லியம்சன் 796 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் உள்ளார்.
7.அவுஸ்ரேலியா கிரிக்கெட் அணியின் டேவிட் வோர்னர் 794 புள்ளிகளுடன் ஏழாவது இடத்தில் உள்ளார்.
8.இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஜோ ரூட் 787 புள்ளிகளுடன் எட்டாவது இடத்தில் உள்ளார்.
9.மேற்கிந்திய தீவுகள் அணியின் சாய் ஹோப் 782 புள்ளிகளுடன் ஒன்தாவது இடத்தில் உள்ளார்.
10.தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் குயிண்டன் டி கொக் 781 புள்ளிகளுடன் பத்தாவது இடத்தில் உள்ளார்.

அடுத்தாக ஒருநாள் பந்து வீச்சாளர்களின் தரவரிசையை பார்க்கலாம்.

1.இந்தியக் கிரிக்கெட் அணியின் ஜஸ்பிரிட் பும்ரா 785 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.
2.நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் ட்ரென்ட் போல்ட் 740 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறார்.
3.ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் முஜிப் உர் ரஹ்மான் 707 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
4.தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் கார்கிஸோ ரபாடா, 694 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளார்.
5.அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணியின் பெட் கம்மின்ஸ், 693 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளார்.

6.இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கிறிஸ் வோக்ஸ், 676 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் உள்ளார்.
7.அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் மிட்செல் ஸ்டார்க், 663 புள்ளிகளுடன் ஏழாவது இடத்தில் உள்ளார்.
8.பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மொஹமட் ஆமிர், 663 புள்ளிகளுடன் எட்டாவது இடத்தில் உள்ளார்.
9.நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் மெட் ஹென்ரி, 656 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்தில் உள்ளார்.
10.நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் மற்றொரு வீரரான லொக்கி பெர்குசன் 649 புள்ளிகளுடன் பத்தாவது இடத்தில் உள்ளார்.


Recommended For You

About the Author: ஈழவன்