ஆப்கானிஸ்தானில் தாக்குதல் – 109 பயங்கரவாதிகள் படுகொலை

ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புப் படையினர் நடத்திவரும் தாக்குதல்களில் கடந்த 24 மணி நேரத்தில் 109 பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளனர்.

இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள டுவிற்றர் பதிவில், “கடந்த 24 மணி நேரத்தில் 15 மாகாணங்களில் 18 இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதில் 109 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதுடன் 45 பேர் காயமடைந்தனர். அத்துடன் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்” எனக் கூறப்பட்டுள்ளது.

ஆனால், கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகள் ஒரே அமைப்பைச் சேர்ந்தவர்களா அல்லது பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களா? என்ற விபரம் வெளியிடப்படவில்லை.

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாத அமைப்புடன் நடத்தி வந்த அமைதிப் பேச்சுவார்த்தையை முறித்துக்கொள்வதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்ததையடுத்து, பயங்கரவாதிகள் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், தலிபான்களை களையெடுக்கும் முயற்சியாக ஆப்கானிஸ்தான் இராணுவம் அதிரடித் தாக்குதல்களை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்