சிரியாவில் கார் குண்டுவெடிப்பு – 8பேர் பலி.

சிரியாவில் துருக்கியின் கட்டுப்பாட்டு எல்லைப் பகுதியில் இடம்பெற்ற கார் குண்டுவெடிப்பில் குழந்தை உட்பட 8 பேர் உயிரிழந்ததடன் பலர் காயமடைந்தனர்.

எல்லைக் கிராமமான சுலுக் பகுதியில் நேற்று  மாலை நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலை யார் மேற்கொண்டார்கள் எனத் தெரியரவில்லையென சிரியாவில் இயங்கும் கண்காணிப்பு அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

துருக்கியில் தற்போதைய நிலைவரப்படி சுமார் 3.7 மில்லியன் சிரிய அகதிகள் உள்ளனர். உலகிலேயே அதிக அளவில் அகதிகளைக் கொண்ட நாடாக துருக்கி அறியப்படுகிறது. இந்நிலையில் சிரியாவின் வடக்குப் பகுதியில் நிகழும் வன்முறை காரணமாக அங்கிருந்து மக்கள் துருக்கி நோக்கி வருவதாக எர்டோகன் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில் தொடர்ந்து சிரியாவின் வடக்குப் பகுதியில் வன்முறை நடந்து வருகிறது. முன்னதாக, துருக்கி எல்லையையொட்டிய சிரியாவில் குர்திஷ் போராளிகள் எல்லையோரப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளனர் என்று கூறி அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இதையடுத்து துருக்கியின் தாக்குதல் காரணமாக சுமார் 4 இலட்சம் மக்கள் சிரியாவின் வடக்குப் பகுதியிலிருந்து வெளியேறினர். இந்நிலையில் அவ்வப்போது குறித்த பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்