
வீதியை கடக்கும் தவளைகள் வாகனத்துக்குள் சிக்குண்டு இறப்பதை தடுக்க, வீதியை முடக்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
Lamballe (Côtes d’Armor) நகரில் இந்த நூதன சம்பவம் இடம்பெற்றுள்ளது. 28 ஆம் இலக்க இந்த வீதியின் இரண்டு பக்க வீதிகளிலும் காட்டுப்பகுதி இருப்பதால், அங்கிருந்து தவளைகள் வீதிகளை கடக்கின்றன.
அதன் போது தவளைகள் விபத்துக்குள்ளாகின்றன எனவும், உயிரிழக்கின்றன எனவும் பல தன்னார்வ விலங்குகள் பாதுகாப்பு நிறுவனங்கள் குரலெழுப்பியிருந்தன. பின்னர் இத்தவளைகளை பாதுகாக்க பல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், வீதி தற்போது மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் மார்ச் மாதம் (2020) வரை இந்த வீதி மூடப்பட்டு மாற்று வழிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
