
நாளை டிசம்பர் 25 ஆம் திகதி கிருஸ்துமஸ் நாள் அன்று அனைத்து மெற்றோ சேவைகளும் தடைப்பட உள்ளன.
முதலாம் இலக்க மற்றும் 14 ஆம் இலக்க மெற்றோக்கள் தானியங்கி சேவை என்பதால் அவை இரண்டும் இயங்கும் எனவும், மீதமான 14 மெற்றோ சேவைகளும் மூடப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 5 ஆம் திகதி வேலை நிறுத்தத்தின் முதல் நாள் 11 மெற்றோ சேவைகள் தடைப்பட்ட நிலையில், நாளை 14 வழிச் சேவைகள் தடைப்படுவது ஒரு சாதனையான நாளாக தொழிலாளர்களால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
* போக்குவரத்து குறித்த விரிவான விபரங்கள் நாளை காலை வெளியாகும்.