
நபர் ஒருவரது சடலம் வீதி ஓரத்தில் இருந்து மீட்கப்பட்டதை தொடர்ந்து, இளைன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Les Mureaux (Yvelines) நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதே நகரில் வசிக்கும் 44 வயதுடைய நபர் ஒருவர் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை காணாமல் போயிருந்தார்.
காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, தேடுதல் பணிகள் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில், நேற்று திங்கட்கிழமை இரவு அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
A13 நெடுஞ்சாலை ஓரத்தில் இவரது சடலத்தை அவர்களது குடும்பத்தினர் கண்டுபிடித்துள்ளனர். காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு சடலம் மீட்கப்பட்டது.
அவர் பலத்த கத்திக்குத்து காயங்களுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இந்த வழக்கில் 25 வயதுடைய இளைஞன் ஒருவரை நேற்று திங்கட்கிழமை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இளைஞன் உயிரிழந்த நபரின் உறவினர் என அறிய முடிகிறது.