Brégançon தீவில் கிருஸ்துமஸ் கொண்டாடும் மக்ரோன் தம்பதிகள்..!!

ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் மற்றும் முதல் பெண்மணி பிரிஜித் மக்ரோன் தங்களது கிருஸ்துமஸ் விடுமுறையை Fort de Brégançon தீவில் கொண்டாட உள்ளனர்.

பிரெஞ்சு ஜனாதிபதிகளுக்கு என மாத்திரம் ஒதுக்கப்பட்டுள்ள இந்த குட்டித்தீவிற்கு மக்ரோன் தம்பதிகள் பயணிப்பது இது மூன்றாவது தடவை. இன்று செவ்வாய்க்கிழமை எலிசே மாளிகை தரப்பில் இத்தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த சில நாட்களுக்கு Fort de Brégançon தீவில் தனது மனைவியுடன் தங்க உள்ளார்.

புதுவருடத்தின் முதல் நாள் மாலை அவர்கள் பரிசுக்கு திரும்புவார்கள் என அறிய முடிகிறது. டிசம்பர் 31 ஆம் திகதி வரை ஜனாதிபதி ஊடகங்களிடம் தொடர்பில் இருக்கமாட்டார் எனவும், எவ்வித உரையும், கிருஸ்துமஸ் வாழ்த்துச் செய்தியும் ஊடகம் மூலமாக அறிவிக்க மாட்டார் எனவும் அறிய முடிகிறது.

முன்னதாக 2018 ஆம் ஆண்டின் இறுதியில் நான்கு நாட்கள் இவர்கள் இத்தீவில் தங்கியிருந்தமையும், மக்ரோன் ஜனாதிபதி ஆனதன் பின்னர் இத்தீவில் நீச்சல் தடாகம் அமைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor